அரசியலில் எத்தனையோ சவால்களைச் சந்திக்கும் ராகுல் காந்திக்கு, ராய்பரேலி மண் எப்போதும் ஒரு உணர்வுப்பூர்வமான இடமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், தனது தொகுதியில் அவர் மேற்கொண்ட பயணத்தின் போது எதிர்பாராத ஒரு பொக்கிஷம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ராய்பரேலி பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரைத் தொடங்கி வைக்க ராகுல் காந்தி சென்றிருந்தபோது, அங்கிருந்த விகாஸ் சிங் என்ற நபர் ராகுலிடம் ஒரு பழைய ஆவணத்தை வழங்கினார்.
राहुल गांधी को मिला दादा का खोया ड्राइविंग लाइसेंस
रायबरेली दौरे के दौरान कांग्रेस सांसद राहुल गांधी को एक व्यक्ति ने उनके दादा फिरोज गांधी का ड्राइविंग लाइसेंस सौंपा. इस तोहफे को देख राहुल गांधी काफी खुश नज़र आए. वीडियो सोशल मीडिया पर वायरल#RahulGandhi #Raebareli… pic.twitter.com/SGHdpVxqy3
— NDTV India (@ndtvindia) January 21, 2026
அது ராகுல் காந்தியின் தாத்தாவும், முன்னாள் எம்.பி-யுமான பெரோஸ் காந்தியின் ஓட்டுநர் உரிமம் (Driving License). பல தசாப்தங்களுக்கு முன்பு ராய்பரேலியில் நடந்த ஒரு நிகழ்வின் போது விகாஸ் சிங்கின் மாமனாருக்கு இந்த லைசென்ஸ் கிடைத்துள்ளது.
ஒரு அமானத்தியமாக இதனை அந்தப் குடும்பம் பல தலைமுறைகளாகப் பத்திரப்படுத்தி வந்துள்ளது. தனது தாத்தாவின் கையெழுத்து இருந்த அந்த உரிமத்தைப் பார்த்ததும் ராகுல் நெகிழ்ந்து போனார்.
உடனே தனது மொபைலில் அதைப் புகைப்படம் எடுத்து, தனது தாய் சோனியா காந்திக்கும், சகோதரி பிரியங்கா காந்திக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்பி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
