சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கவனக்குறைவாக வாகனம் ஓட்டி ஒரு உயிரைப் பறித்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பெண் தலைமறைவாக இருப்பது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநீதியைக் கண்டு பொங்கிய பின்னணிப் பாடகி சின்மயி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துக் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் அதில், தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பது வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சின்மயியின் இந்தப் பதிவு வெளியானதைத் தொடர்ந்து, இணையதளவாசிகள் பலரும் அந்தப் பெண்ணுக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். “பணம் இருந்தால் எதையும் மறைத்துவிடலாமா?” என்று கூறியுள்ளார்.
மேலும் “உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்” என்றும் நெட்டிசன்கள் ஆவேசமாகச் சாடி வருகின்றனர். இந்நிலையில் ஒரு உயிரின் மதிப்பு இவ்வளவு தானா என்ற கேள்வியுடன், காவல்துறையினர் உடனடியாக அந்தப் பெண்ணைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது.
