ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள 282 அடி உயரமுள்ள ஜிண்டால் கோபுரத்தின் உச்சியில், ராஜஸ்தானைச் சேர்ந்த மோனு என்ற இளைஞர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்ட காணொளி இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Ravii Bhangarh 🚀 (@ravii__choudharyy)

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், பாதுகாப்பு வளையங்களை மீறி கோபுரத்தின் உச்சிக்குச் சென்ற அந்த இளைஞர், அங்கிருந்த விளிம்பில் நின்றபடி தலைகீழாக நிற்பது மற்றும் கைகளால் மட்டும் தொங்குவது போன்ற அதீத ஆபத்தான செயல்களைச் செய்துள்ளார்.

மதுபாட்டில்களை அருகில் வைத்துக்கொண்டு அவர் செய்த இந்தச் செயலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, கோபுர ஊழியர்கள் அவரைப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் தனது தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டதால், காவல்துறையினர் அந்த இளைஞருக்கு உரிய அறிவுரைகளை வழங்கி விடுவித்தனர்.

சமூக வலைதளங்களில் புகழ்பெற்றாக வேண்டும் என்ற நோக்கில் தனது உயிருக்கு உலை வைக்கும் வகையில் இளைஞர் ஒருவர் ஈடுபட்ட இந்தச் செயல் பொதுமக்களிடையே பெரும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.