சமூக வலைதளங்களில் ஒரு பெண்ணின் புத்திசாலித்தனமான வீட்டு உபயோகக் குறிப்பு தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாக மின்சார அயர்ன் பாக்ஸ் அல்லது சார்ஜர் போன்ற சாதனங்களின் நீண்ட கம்பிகள் சரியாக மடிக்கப்படாமல் சிக்குண்டோ அல்லது அங்கும் இங்குமாக கலைந்தோ கிடக்கும்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, அந்தப் பெண் காலியான ஒரு பழைய டூத்பேஸ்ட் டியூப்பை பயன்படுத்தி அற்புதமான ‘ஜுகாட்’ எனும் தந்திரத்தைச் செய்துள்ளார். காலியான பேஸ்ட் டியூப்பைத் தூக்கி எறியாமல், அதன் ஒரு பகுதியில் துளையிட்டு, சுருட்டப்பட்ட ஒயர்களை அதனுள் இருக்குமாறு மிக நேர்த்தியாக அந்தப் பெண் கையாண்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by namasvi (@namasvi_or_mumma)

“>

இந்த எளிய மற்றும் செலவில்லாத உத்தியைப் பார்த்த இணையவாசிகள் வியப்படைந்துள்ளனர். தேவையில்லை என்று நாம் தூக்கி எறியும் ஒரு சாதாரண பிளாஸ்டிக் டியூப்பை, அன்றாட வாழ்க்கையின் ஒரு சிக்கலைத் தீர்க்கும் கருவியாக மாற்றியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

மேலும் பயணங்களின் போது சார்ஜர் மற்றும் இயர்போன் ஒயர்கள் ஒன்றோடொன்று சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆக்கபூர்வமான சிந்தனை இருந்தால் கழிவுப் பொருட்களையும் உபயோகமான பொருளாக மாற்றலாம் என்பதற்கு இந்த வைரல் வீடியோ ஒரு சிறந்த உதாரணமாகும்.