சமூக வலைதளங்களில் சமீபகாலமாக திருமண வைபவங்களின் போது நடக்கும் வினோதமான சம்பவங்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், ஒரு கூட்டுத் திருமண விழாவில் மணமகன் ஒருவர் மேடையிலேயே மிகவும் வேடிக்கையாக நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், திருமண உடையில் இருக்கும் மணமகன் திடீரென்று மேடையில் ஏறி, பெண்களைப் போல இடுப்பை வளைத்து நெளித்து விசித்திரமான முறையில் நடனமாடுகிறார். இதைப் பார்த்த அங்கிருந்த விருந்தினர்களும் அதிகாரிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்; சிலர் இந்தச் செயலால் சங்கடமடைந்து முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.
View this post on Instagram
“>
இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டதிலிருந்து லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. மணமகனின் இந்த அதீத துள்ளல் நடனத்தைக் கண்ட நெட்டிசன்கள் பல்வேறு நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் “இவன் இப்படியே ஆடினால் நிச்சயம் பெண்ணின் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டு ஊருக்குத் திரும்பிச் சென்றுவிடுவார்கள்” என்று சிலர் கிண்டலாகக் கமெண்ட் செய்துள்ளனர். மணமகனின் இந்தத் தயக்கமில்லாத, வேடிக்கையான நடனம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
