மும்பையில் நடைபெற்ற ‘டாட்டா மும்பை மாரத்தான்’ போட்டியில், ஓட்டப்பந்தய வீரர்களுடன் இணைந்து தெருநாய்களும் ஆர்வத்துடன் ஓடிய நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதிகாலையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்தபோது, இரண்டு தெருநாய்கள் திடீரென அவர்களுடன் இணைந்துகொண்டன.
மேலும் எவ்விதப் பயிற்சியும் இன்றி, வீரர்களின் வேகத்திற்கு இணையாக அந்த நாய்கள் ஓடிய காட்சி அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. மாரத்தான் அமைப்பின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, மும்பை நகரின் உள்ளடக்கிய உணர்வையும் உயிரினங்கள் மீதான அன்பையும் பறைசாற்றுவதாக அமைந்தது.
View this post on Instagram
“>
இந்நிலையில் இந்தக் காணொலியைக் கண்ட இணையவாசிகள் நாய்களை “சிறந்த தடகள வீரர்கள்” என்று பாராட்டி வருகின்றனர். “யாரும் பின்தங்கிவிடக்கூடாது, அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்” என்பதற்கு இந்த நாய்களே சாட்சி என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மகிழ்ச்சிக்காக மட்டுமே ஓடிய இந்த வாயில்லா ஜீவன்களின் செயல், மும்பை மாரத்தானின் உற்சாகத்தை மேலும் மெருகேற்றியுள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளதுடன், தெருநாய்கள் மீதான ஒரு நேர்மறையான பார்வையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
