சீனாவின் இரண்டாம் நிலை நகரம் ஒன்றில் அனைத்து வசதிகளுடன் கூடிய சிறிய அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்று வெறும் 9000 ரூபாய்க்குக் குறைவான மாத வாடகையில் கிடைப்பது சமூக வலைதளங்களில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காணொளியை சூ ஜென்கிங் என்பவர் இணையத்தில் பகிர அது தற்போது 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
✨🇨🇳This studio apartment in a second-tier Chinese city can be rented for about 780 yuan per month (≈109 USD). pic.twitter.com/PjNbMFX4x7
— 🇨🇳XuZhenqing徐祯卿 (@XueJia24682) January 17, 2026
அந்த வீட்டில் தங்குவதற்குத் தேவையான கட்டில் மற்றும் சமையல் அறை மற்றும் கழிப்பறை என அனைத்து அடிப்படை வசதிகளும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருப்பது உலக நாடுகளின் பெருநகரங்களில் வசிக்கும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வளவு குறைவான விலையில் ஒரு நவீன வீடு நகரப் பகுதியில் கிடைப்பது சாத்தியமா எனப் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இது போன்ற மலிவான வாடகை வீடுகள் சீனாவில் வசிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
