தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கும் நேரத்தில் தற்போது அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான வியூகத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகும் என்றும் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்றும் கூறி வருகிறார். அடுத்த தேர்தலுக்காக அதிமுக, பாஜக மற்றும் பாமக ஆகிய காட்சிகள் கூட்டணி அமைத்துள்ள நிலையில் திமுக கூட்டணியில் 16-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு திடீரென எடப்பாடி பழனிச்சாமியை நேரில் தனியாக சந்தித்து பேசியுள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

அதாவது திமுக கூட்டணியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக அவர் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி அதிமுக கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வரும் நிலையில் இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனை போட்டிகள் தமிழ்நாட்டில் நிலவுவது குறிப்பிடத்தக்கதாகும்.
