தமிழக அரசியலில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இப்போது சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக பக்கமாகச் சாய்ந்துவிட்டதாகத் தகவல்கள் வரும் நிலையில், டாக்டர் ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது. வடமாவட்டங்களில் பாமக-வின் பலத்தைப் பயன்படுத்தி மீண்டும் வெற்றி பெறலாம் என திமுக கணக்குப் போட்டது. இதற்காகத் தங்கள் கூட்டணியில் இருக்கும் விசிக-வைச் சமாதானம் செய்ய திமுக முயன்று வருவதாகக் கூறப்பட்டது.
ஆனால், இதற்கு விசிக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாமக போன்ற சாதியக் கட்சியுடன் எப்போதும் தங்களுக்கு உறவு கிடையாது என விசிக-வின் வன்னியரசு வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார். இது ராமதாஸை உள்ளே கொண்டு வர நினைத்த திமுக-வுக்குப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. விசிக-வா அல்லது பாமக-வா என்ற இக்கட்டான சூழ்நிலையில் திமுக இப்போது சிக்கியுள்ளது.
