உயிரினங்கள் பிறப்பதும் இறப்பதும் இயற்கை நியதி என்றாலும், மரணம் என்பது யாராலும் தவிர்க்க முடியாத ஒரு கசப்பான உண்மையாக உள்ளது. பொதுவாக மரணம் எப்போது நிகழும் என்பது மனிதர்களுக்குத் தெரியாது என்றாலும், கருட புராணத்தில் மரணத்திற்கு முன்னால் தென்படும் அறிகுறிகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
பார்வை மங்குதல், நிழல் தெரியாமல் போவது, பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைவது போன்றவை மரணம் நெருங்குவதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. இதேபோல், சில விலங்குகளுக்குத் தங்களது மரணம் எப்போது நிகழும் என்பது ஒரு வாரத்திற்கு முன்பே தெரிந்துவிடும் என்றும், அந்தத் தருணத்தில் அவை வினோதமான முறையில் நடந்துகொள்ளும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மிகவும் அறிவுக்கூர்மை கொண்ட விலங்குகளாகக் கருதப்படும் யானைகள், தங்களது மரணத்தை முன்கூட்டியே உணரும் திறன் கொண்டவை. மரணம் நெருங்குவதை உணர்ந்தவுடன் யானைகள் உணவு உண்பதையும் தண்ணீர் குடிப்பதையும் தவிர்த்துவிட்டு, கூட்டத்திலிருந்து விலகித் தனிமையில் இருக்க விரும்பும்.
இதேபோல், நாய்களும் தங்களது மரணத்தை மட்டுமல்லாமல் மனிதர்களின் மரணத்தையும் முன்கூட்டியே அறியும் வல்லமை கொண்டவை. பூனைகள் தங்களது இறப்பிற்குப் பல வாரங்களுக்கு முன்பே அதனை உணர்ந்து தனி இடத்தைத் தேடிச் சென்றுவிடும் என்றும், தேள்கள் தங்களது மரணத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்பே உணவு உட்கொள்வதை நிறுத்திவிடும் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு இயற்கையோடு இணைந்த சில விலங்குகள் தங்களது இறுதி நாட்களை முன்கூட்டியே அறிந்து செயல்படுவது ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது.
