டெல்லியில் உள்ள ஜகீரா மேம்பாலத்தில் ஸ்கூட்டர் மோதியதில் தள்ளுவண்டி வியாபாரி ஒருவரின் உணவுப் பொருட்கள் சாலையில் கொட்டி வீணான சம்பவம், சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேம்பாலத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்த அந்த நபரின் வண்டியில் ஸ்கூட்டர் மோதியதில், அவர் விற்பனைக்காக வைத்திருந்த சோலே சாவல் மற்றும் ராய்தா உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் சாலையில் சிதறி போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது.

இந்த விபத்து தொடர்பாக வியாபாரி 5,000 ரூபாய் நஷ்டஈடு கேட்ட நிலையில், ஸ்கூட்டரில் வந்தவர் 1,000 ரூபாய் மட்டுமே தர முன்வந்தார். இந்தத் தகவல் இணையத்தில் பரவியதும், ஒரு நாள் நஷ்டத்திற்கு 5,000 ரூபாய் கேட்கிறார் என்றால், அந்த வியாபாரியின் மாத வருமானம் சுமார் 1.50 லட்சம் ரூபாயாக இருக்கும் என நெட்டிசன்கள் கணக்கிட்டு வியப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Manish (@tanwarfamilyvlogs)

அதே வேளையில், மேம்பாலம் போன்ற அபாயகரமான இடங்களில் வண்டி வைத்து வியாபாரம் செய்வது விபத்திற்கு வழிவகுக்கும் என்றும் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.