நெட்ஃபிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகும் ‘கபில் சர்மா ஷோ’வில் இந்த வாரம் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக் மற்றும் முகமது கைஃப் ஆகியோர் விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அப்போது அவர்கள் தங்கள் பழைய கிரிக்கெட் நினைவுகளை மிகவும் வேடிக்கையாகப் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, “நாங்கள் விளையாடும்போது சிக்ஸராக விளாசுவதால், சியர்லீடர்ஸ் ஓய்வெடுக்க வேண்டும் என்பதற்காகவே திராவிட் பேட்டிங் வர வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள்” என கபில் சர்மா கிண்டலடித்தார்.
தற்போது ஓய்வு காலத்தில் என்ன செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இப்போதுதான் மதியம் என்ன சாப்பிடலாம், இரவு என்ன சாப்பிடலாம் என்று நிம்மதியாக யோசிக்கிறோம்” எனச் சேவாக் தனது பாணியில் பதிலளித்தார். மேலும், தன்னை ஏழை என்று சொல்லிக்கொண்ட முகமது கைஃப், ‘குச்சி’ (Gucci) பிராண்ட் ஷூ அணிந்திருப்பதை யுவராஜ் சிங் சுட்டிக்காட்டி அவரைக் கலாய்த்தது அனைவரையும் சிரிக்க வைத்தது. தற்போது இந்த ஷோவிற்குப் பார்வையாளர்கள் குறைந்திருந்தாலும், இந்த கிரிக்கெட் வீரர்களின் வருகை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
