மேரி கோம் சமீபத்தில் ஒரு பேட்டியில், “என் கணவர் என் பணத்தையெல்லாம் ஏமாற்றிவிட்டார், அவர் ஒரு பைசா கூட சம்பாதித்தது இல்லை” என்று மிகவும் காரசாரமாகப் பேசியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஓன்லர், “மேரி கோம் ஒரு ‘சிம்பதி’ (Sympathy) தேடும் நாடகத்தை ஆடுகிறார்” என்று வெடித்துள்ளார். தான் UPSC தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, மேரி கோமின் ஆசைக்காகத் தன் கரியரையே விட்டுவிட்டு, குழந்தைகளைப் பார்த்துக்கொண்டதாகவும், சமையல்காரராகவும் டிரைவராகவும் அடிமை போல உழைத்ததாகவும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மேரி கோமுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், குறிப்பாக 2013-ல் ஒரு ஜூனியர் பாக்ஸருடன் தொடர்பு இருந்ததற்குத் தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் ஓன்லர் கூறியுள்ளார். “தற்போது வேறொருவரின் கணவருடன் மேரிக்கு இருக்கும் தொடர்பு வெளியில் தெரிந்தவுடன், என்னைப் பழிவாங்கி தப்பிக்கப் பார்க்கிறார்” என்று அவர் சாடியுள்ளார். மேலும், மேரி கோம் புகையிலை பழக்கம் கொண்டவர் என்றும், தன்னிடம் எந்த சொத்தும் இல்லை, ஒரு வாடகை வீட்டில்தான் வசித்து வருவதாகவும் கூறி ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.