சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு அறைக்குள் ஐந்து பயங்கரமான ராஜநாகங்கள் (Cobra) இருப்பதை நாம் காணலாம். அதில் நான்கு பாம்புகள் படம் எடுத்து ஆடிக்கொண்டிருக்க, ஒரு பாம்பு மட்டும் சுவரில் ஏறி தப்பிக்க முயல்கிறது. அந்த நேரத்தில் அங்கே திடீரென ஒரு கீரிப்பிள்ளை நுழைகிறது. பொதுவாகவே பாம்புகளின் பரம எதிரியான கீரி, சுவரில் ஏற முயன்ற கோப்ராவை மின்னல் வேகத்தில் தாக்கியது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அங்கு இருந்த மற்ற நான்கு கோப்ராக்களும் தன் கூட்டாளியைக் காப்பாற்ற முயலாமல், கீரிப்பிள்ளைக்குப் பயந்து ஓரமாக ஒதுங்கி நின்றன.

​கீரிப்பிள்ளையின் வேகம் மற்றும் தைரியத்தைக் கண்டு அங்கிருந்த பாம்புகள் செயலற்றுப் போயின. இந்த வீடியோ எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. “கீரிப்பிள்ளை பாம்புகளை வேட்டையாடும் என்பது தெரியும், ஆனால் இத்தனை பாம்புகள் இருக்கும் இடத்தில் அதை விடுவது சரியா?” என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயம், இத்தனை நச்சுப் பாம்புகள் இருந்தும் தனியாளாகச் சென்று மோதிய அந்த கீரிப்பிள்ளையின் “கெத்து” வீடியோவைப் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.