பிரேசிலின் பிராக்கோ டோ நோர்டே பகுதியில், ஒரு பெண் சாலையைக் கடக்க முயன்றபோது மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி அதிரவைத்துள்ளன. அந்தப் பெண் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளை நிற காரின் அருகே சென்றபோது, மின்னல் வேகத்தில் வந்த ஒரு பிக்கப் டிரக் அந்த காரின் பின்னால் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்தப் பிக்கப் டிரக் அப்படியே தலைகீழாகக் கவிழ்ந்தது. அந்தப் பெண் இரு வாகனங்களுக்கும் இடையே நூலிழையில் சிக்கியும் கூட, ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் உயிர் தப்பியது ஒரு மிகப்பெரிய அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும்.
Her guardian angels were just in time. pic.twitter.com/Qdp2ZNMFLC
— The Best (@Thebestfigen) January 15, 2026
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில், அந்தப் பெண் அப்படியே உறைந்து போய் நிற்பதும், பின்னர் காயமின்றி தப்பிப்பதும் பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கிறது. இது தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “நிச்சயமாக இவருக்கு ஆயுசு கெட்டி தான்” என்றும், “கடவுள் இவருக்கு மறுபிறவி கொடுத்திருக்கிறார்” என்றும் வியப்புடன் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
