சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் பல வீடியோக்கள் வைரலாகின்றன, ஆனால் சில வீடியோக்கள் நம்மை நிலைகுலையச் செய்துவிடும். அப்படித்தான் கடலின் நடுவே ஒரு பிரம்மாண்டமான திமிங்கிலம் படகு ஒன்றைத் தாக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடலில் பல படகுகள் வரிசையாகச் சென்று கொண்டிருக்கும்போது, அங்கிருந்த ஒருவர் அந்த அழகிய காட்சியைத் தனது கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, கடலுக்கு அடியில் இருந்து ஒரு ராட்சத திமிங்கிலம் திடீரென வெளியே குதித்து, அங்கிருந்த ஒரு படகின் மீது பயங்கரமாக வந்து விழுந்தது.
Whale lands on boat 😮 pic.twitter.com/ZN1rjc8KxA
— Viral News Vibes (@viralnewsvibes) January 15, 2026
அந்த ராட்சத திமிங்கிலம் மோதிய வேகத்தில், நிலைதடுமாறிய அந்தப் படகு சில நொடிகளிலேயே கடலில் தலைகீழாகக் கவிழ்ந்து மூழ்கத் தொடங்கியது. திமிங்கிலத்தின் பிரம்மாண்ட உருவத்திற்கு முன்னால் அந்தப் படகு ஒரு சிறிய விளையாட்டுப் பொருள் போலத் தெரிந்தது இந்த விபத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற படகுகளில் இருந்த மக்கள் அச்சத்தில் உறைந்து போயினர். இந்த திக் திக் காட்சிகள் தற்போது எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இயற்கையின் வலிமைக்கு முன்னால் மனிதர்கள் எவ்வளவு எளியவர்கள் என்பதை உணர்த்துவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
