ரயிலின் 2AC பெட்டியில் ஒரு நபர் ஐபோன் விற்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு நபர் தன்னிடம் விவோ முதல் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் வரை இருப்பதாகக் கூறி வியாபாரம் செய்கிறார். பயணி ஒருவர் அவரிடம் ஐபோனை வாங்கி அதன் கேமராவைச் சோதித்த பிறகு, போனை அன்லாக் செய்யச் சொல்கிறார்.

அந்த ஐபோனின் விலை வெறும் 20 ஆயிரம் ரூபாய் என்று அந்த நபர் கூறுகிறார். பொதுவாக ரயில்களில் டீ, காபி விற்பவர்களைத் தாண்டி, இது போன்ற விலை உயர்ந்த போன்களை விற்பது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து நெட்டிசன்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். வீடியோவில் உள்ள போன் ஏற்கனவே ஒரு வைஃபை  நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருப்பதையும், அது பயன்படுத்தப்பட்ட போன் போல இருப்பதையும் கவனித்த பலரும், இது ஒரு ‘பிராங்க்’  வீடியோ அல்லது திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட் வீடியோ என்று விமர்சித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Prem Verma (@premverma7363)

“>

ரயில்களில் விற்கப்படும் பவர் பேங்க், இயர்போன் போன்ற மின்னணு சாதனங்கள் பெரும்பாலும் போலியானவை என்பதால், பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், ஐபோன் போன்ற பிராண்டுகளை அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.