அமெரிக்காவின் அட்லாண்டா அருகே உள்ள லீ கவுண்டியில் (Lee County) கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் பிளாஸ்டிக் பைகள் குவியல் குவியலாகக் கிடப்பதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்தப் பைகளைத் திறந்து பார்த்தபோது, உள்ளே 29 நாய்கள் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

அதுமட்டுமில்லாமல், அதே வீட்டிற்குள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மேலும் 24 நாய்களைப் போலீசார் மீட்டனர். அந்த நாய்கள் அனைத்தும் எலும்பும் தோலுமாக, உணவின்றி மிகவும் மோசமான நிலையில் இருந்தன.

இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 63 வயது முதியவர் உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இவர்கள் மீது விலங்குகள் வன்கொடுமை உட்பட மொத்தம் 111 வழக்குகள் பாய்ந்துள்ளன. “விலங்குகளை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை, இப்படிச் சித்திரவதை செய்யாதீர்கள்” என இணையத்தில் மக்கள் கொந்தளித்து வருகின்றனர். மீட்கப்பட்ட நாய்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.