எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும் நிலையில், படக்குழுவினர் தற்போது உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்து வருகின்றன. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், படத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 21-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் தடையை நீக்கக் கோரியும், தணிக்கை சான்றிதழ் தொடர்பான விவகாரத்தில் தீர்வு காணவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதால், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பொங்கல் விடுமுறை வசூலைக் கருத்தில் கொண்டும், ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவும் எப்படியாவது ஜனவரி 14-ஆம் தேதிக்குள் படத்தை ரிலீஸ் செய்யப் படக்குழுவினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக அமையும் பட்சத்தில், ‘ஜன நாயகன்’ பொங்கல் ரேசில் களம் இறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.