சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில சுவாரசியமான மற்றும் மனதைக் கவரும் வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு உணவகத்தில் பணிபுரியும் வெயிட்டர் ஒருவர், தனது காதலியுடன் அதே உணவகத்தில் அமர்ந்து உணவு அருந்தும் வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
மேலும் வழக்கமாக வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்யும் ஒரு பணியாளர், அதே இடத்தில் ஒரு கௌரவமான வாடிக்கையாளராகத் தனது காதலியுடன் அமர்ந்து உணவருந்திய இந்த ‘பாபி இஸ் ஹியர்’ தருணம், பலரது இதயங்களை வென்றுள்ளது.
Nowadays, It’s rare to find a girl like this
Now all are golddiggers who want a guy with 50cr lpa
Very few women stay with strugglers
Day made, happy to see pic.twitter.com/qhzn86F7Xb
— Kantala fc (@ifOnlyKantala) January 11, 2026
“>
இந்த வீடியோவில், அந்த இளைஞர் தனது சீருடையுடன் உணவகத்தின் மேஜையில் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே அவரது காதலி அமர்ந்துள்ளார். சக ஊழியர்கள் தங்களது சக நண்பனுக்கு மிகுந்த மரியாதையுடனும் புன்னகையுடனும் உணவைப் பரிமாறுகின்றனர். “உழைக்கும் இடத்திலும் ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய கௌரவம்” எனப் பலரும் இந்த வீடியோவைப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் காதலிக்குத் தனது பணியிடத்தைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள சக ஊழியர்களின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெறுவது ஒரு நெகிழ்ச்சியான தருணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.
