பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக அரசு அறிவித்து வரும் திட்டங்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். நான்கரை ஆண்டுகளாக எதையும் செய்யாமல் தூங்கிவிட்டு, இப்போது தேர்தல் பயத்தில் மாணவர்களுக்கு லேப்டாப், பொங்கல் ரொக்கம் மற்றும் ஓய்வூதியத் திட்டம் எனப் புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல், மத்திய அரசின் திட்டத்திற்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

இந்த அறிவிப்புகள் அனைத்தும் வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே செய்யப்படுவதாகவும், அரசுப் பணியாளர்கள் நலனில் திமுகவிற்கு உண்மையான அக்கறை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த 70 நாட்களில் இன்னும் எத்தனை வெற்று அறிவிப்புகளை வெளியிட்டாலும், தேர்தல் நேரத்தில் சீட்டுக்கட்டு மாளிகை போல திமுகவின் கோட்டை மக்களின் வாக்குகளால் சரிவது உறுதி என்று நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.