இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான முதல் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள நிலையில், இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ள விராட் கோலி, பயிற்சியின் போது மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். அப்போது, இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கின் ஓடி வரும் பாணியை (Bowling Run-up) அப்படியே கிண்டலாக செய்து காட்டி சக வீரர்களைச் சிரிக்க வைத்தார்.
Virat Kohli is mimicking Arshdeep Singh’s running style 😂❤️ pic.twitter.com/RbobLlmn5S
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) January 9, 2026
கோலியின் இந்த நகைச்சுவையான செய்கையை அருகில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் கண்டு விழுந்து விழுந்து சிரித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில், ராகுல், ஜெய்ஸ்வால் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோருடன் பயிற்சி எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் கோலி பகிர்ந்துள்ளார். களத்தில் ஆக்ரோஷமாக காணப்படும் ‘கிங் கோலி’, டிரெஸ்ஸிங் ரூம் சூழலை எவ்வளவு கலகலப்பாக வைத்திருக்கிறார் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
