சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளைஞர் ஒருவர் தனது காது வழியாக ஒரு மெல்லிய கம்பியை நுழைத்து, அதனை மூக்கின் வழியாக வெளியே எடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். பார்ப்பதற்கே உடல் சிலிர்க்க வைக்கும் இந்தச் செயலை அந்த இளைஞர் மிகவும் சாதாரணமாகச் செய்து முடிக்கிறார்.

மேலும் பாரத்வர்ஷ் ஊடகம் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, தற்போது இணையவாசிகளிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. பலரும் அந்த இளைஞரின் அபூர்வமான திறமையைக் கண்டு வியந்தாலும், இது போன்ற ஆபத்தான முயற்சிகளைப் பற்றி கவலையும் தெரிவித்துள்ளனர்.

“>

இந்த வீடியோவை பார்த்த மக்கள், “என்ன ஒரு திறமை!” என்று ஆச்சரியப்பட்டாலும், மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் இதற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காது, மூக்கு மற்றும் தொண்டை பகுதிகள் மிகவும் உணர்திறன் கொண்டவை என்பதால், முறையான பயிற்சி இல்லாமல் இப்படிச் செய்வது கடுமையான காயங்கள் அல்லது உட்புற உறுப்பு சேதங்களுக்கு வழிவகுக்கும்.

இந்நிலையில் அவர் செய்த வெறும் பொழுதுபோக்கிற்காகவோ அல்லது சமூக வலைதளப் புகழுக்காகவோ இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.