எந்தவொரு வீட்டிற்கும் சமையலறைதான் இதயம் போன்றது, அங்குதான் விதவிதமான உணவுகள் தயாராகின்றன. ஆனால், நம் அம்மாக்களின் சிக்கனமான குணத்தால் சில நேரங்களில் சமையலறை அலமாரிகள் காலாவதியான பொருட்களின் கூடாரமாக மாறிவிடுவதுண்டு.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் தனது தாயின் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியைச் சுத்தம் செய்யும் போது, பல ஆண்டுகளாகக் காலாவதியான பாட்டில்கள் மற்றும் ஜாடிகளைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.

கெட்ச்அப் முதல் ஊறுகாய் வரை அனைத்தும் காலாவதியாகி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினாலும், அந்த தாய் அவை இன்னும் நன்றாகத்தான் இருக்கிறது என்று வாதிடுவது சிரிப்பை வரவழைக்கிறது.

இதற்கிடையில், இவ்வளவு காலம் காலாவதியான உணவையே சாப்பிட்டோமா என்று அந்த பெண்ணின் தந்தை திகைத்துப் போய் நிற்பது வேடிக்கையாக உள்ளது.

இறுதியில் அந்தப் பெண் காலாவதியான பொருட்களைக் குப்பையில் வீச, அவரது தாய் அவற்றை மீண்டும் தேடிச் செல்வதும், உடனே மகளும் தந்தையும் சேர்ந்து அம்மாவைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் செல்வதும் வீடியோவின் சுவாரஸ்யமான காட்சிகளாகும்.

இந்த வீடியோவைப் பார்த்த பல இணையவாசிகள், “எங்கள் வீட்டிலும் இதே நிலைமைதான்” என்று தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு பயனர், “என் அம்மாவும் இப்படித்தான், புதிய பொருட்களைக் கொண்டு சமைக்கும்போது சுவை மாறுகிறது என்று சொல்வார், அதுதான் புத்துணர்ச்சி!” என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ali Riley (@rileythree)

“>

அம்மாக்களின் இந்த அன்பான சிக்கனமும், அதனால் ஏற்படும் இத்தகைய கலாட்டாக்களும் பலருக்கும் தங்கள் சொந்தக் கதையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.