தளபதி விஜய்யின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், சென்சார் சிக்கல்களால் திட்டமிட்டபடி நாளை (ஜன. 09) வெளியாகவில்லை. இந்தத் திடீர் ரிலீஸ் தள்ளிவைப்பால், இந்தியத் திரைத்துறை இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் ரீஃபண்ட் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. படம் ரிலீஸாகும் என நம்பி முன்பதிவு செய்யப்பட்ட சுமார் 4.50 லட்சம் டிக்கெட்டுகளுக்கான தொகையைத் தியேட்டர் உரிமையாளர்கள் தற்போது ரசிகர்களுக்குத் திருப்பி அளித்து வருகின்றனர்.

​ஒரே நாளில் இத்தனை லட்சம் டிக்கெட்டுகள் ரீஃபண்ட் செய்யப்படுவது இந்திய சினிமா வரலாற்றிலேயே இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. 500 கோடி பட்ஜெட்டில், 5,000 திரையரங்குகளில் வெளியாகவிருந்த இப்படத்திற்கு சென்சார் போர்டு முட்டுக்கட்டை போட்டதே இந்த நிலைக்குக் காரணம் எனத் திரையுலகினர் தெரிவிக்கின்றனர். இதனால் தயாரிப்பு நிறுவனமான KVN Productions-க்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ரசிகர்களின் பணத்தைப் பாதுகாப்பாகத் திருப்பித் தரும் நடவடிக்கையில் தியேட்டர் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. ஒரு படம் ரிலீஸ் ஆகாமலேயே இப்படி ஒரு “ரீஃபண்ட் சாதனை” படைப்பது கோலிவுட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகன் விவகாரம்: “அண்ணா…. இதையும் தாண்டுவோம்” விஜய்க்கு சிம்பு ஆதரவு….!!

ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு தடை விதித்தது சரியா?