தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்த நிலையில் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் நாளை படம் ரிலீஸ் ஆகாது என பட குழு அறிவித்துள்ளது. இதற்கு மறுநாள் அதாவது ஜனவரி பத்தாம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் வெளியாக இருந்தது.
இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்திற்கும் இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது விஜய் படத்தை போலவே சிவகார்த்திகேயன் படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாத தாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் காரணமாக ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என்றும் ஏற்கனவே நெதர்லாந்தில் பராசக்தி படத்தின் ஷோ ரத்து செய்யப்பட்டது என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
