இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டை (Aadhaar Card) குறித்த புதிய அதிரடி மாற்றத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிளாஸ்டிக் (PVC) ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ரூ.50 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஜனவரி 1, 2026 முதல் இந்தக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு, இனி ஒரு அட்டைக்கு ரூ.75 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

​இந்த விலையேற்றம் குறித்து விளக்கமளித்துள்ள UIDAI, அச்சிடும் செலவு மற்றும் தபால் மூலம் பாதுகாப்பாக டெலிவரி செய்வதற்கான செலவுகள் அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் எனக் கூறியுள்ளது. இந்த புதிய ரூ.75 கட்டணத்திற்குள் ஜிஎஸ்டி (GST) மற்றும் ஸ்பீட் போஸ்ட் (Speed Post) டெலிவரி கட்டணங்கள் அனைத்தும் அடங்கும். பழைய முறையில் பேப்பர் கார்டு வைத்திருப்பவர்கள், நீடித்து உழைக்கக்கூடிய இந்த பிளாஸ்டிக் கார்டைப் பெற இனி கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டியது கட்டாயமாகிறது.

ஆதார் அட்டை கட்டண உயர்வு பற்றி உங்கள் கருத்து என்ன?