சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த டேவிட் மண்டல் என்பவரது 10 வயது மகன் விவியன் மண்டல், கடந்த 1-ஆம் தேதி கடைக்குச் சென்றபோது, அந்தப் பகுதியில் வளர்க்கப்படும் நாய் ஒன்று சிறுவனை இரண்டு இடங்களில் ஆழமாகக் கடித்துக் குதறியது.

இதில் படுகாயமடைந்த சிறுவன் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், அந்த நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டேவிட் மண்டல் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், சிறுவனைக் கடித்த நாயை அதன் உரிமையாளர் ரகசியமாக வேறு இடத்தில் ஒளித்து வைத்துவிட்டதாகவும், அவரது வீட்டில் முறையான பாதுகாப்பு இல்லாமல் இன்னும் 6 நாய்கள் வளர்க்கப்பட்டு வருவதாகவும் டேவிட் குற்றம் சாட்டியுள்ளார்.

நாய் கடியால் தனது மகன் கடும் மன உளைச்சலில் இருப்பதால், உடனடியாக நாயின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.