இந்தியா – வங்கதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எஃப் (BSF) வீரர் ஒருவர், எச்சரிக்கையை மீறி வீடியோ எடுத்த வாலிபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பரபரப்பு வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

திரிபுரா எல்லைப் பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எல்லைக்கு மிக அருகில் வந்து தனது மொபைல் போனில் தடைசெய்யப்பட்ட பகுதிகளைப் படம் பிடித்துள்ளார்.

அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பிஎஸ்எஃப் வீரர், “வீடியோ எடுக்காதே.. மீறினால் சுட்டுவிடுவேன்” என்று பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால், அந்த இளைஞர் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வீடியோ எடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாதுகாப்புப் படை வீரர், “உன்னைச் சுடப்போகிறேன்” என்று கத்திக்கொண்டே தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

துப்பாக்கி சத்தம் கேட்டதும் அந்த இளைஞர் அலறியடித்துக்கொண்டு வங்கதேச எல்லைக்குள் ஓடித் தப்பித்தார். பழைய வீடியோவாக இருந்தாலும், தற்போது இந்தியா – வங்கதேச எல்லையில் பதற்றம் நிலவி வருவதால், இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து ‘நாட்டு நலனில் சமரசம் கிடையாது’ என அந்த வீரருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.