உடல் தளர்ந்த நிலையிலும் சுயமரியாதையுடன் உழைக்கும் முதியவர் ஒருவரின் காணொளி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து மனதை உருக்கி வருகிறது. பொதுவாக ஓய்வெடுக்க வேண்டிய வயதில் இந்த முதியவர் ரயில் நிலையப் படிக்கட்டுகளில் கனமான சுமைகளைச் சுமந்து கூலி வேலை செய்து வருகிறார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது தன் பிள்ளைகள் அவர்கள் வாழ்க்கையில் பிஸியாக இருப்பதாகவும் யாரிடமும் கையேந்த விருப்பம் இல்லாமல் தன் உழைப்பில் கிடைக்கும் உணவை உண்பதையே பெருமையாகக் கருதுவதாகவும் நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார்.
बेटा होने के बाद भी 80 साल का बुजुर्ग क्यों कर रहा कुली का काम, कहानी रुला देगी
बेटा मुंबई में है.’
क्या बेटा पैसे भेजता है?
मुरली बड़ी सादगी और खुद्दारी से कहते हैं, ‘नहीं, हम किसी से नहीं मांगते.’ यह जुमला सिर्फ जवाब नहीं, बल्कि खामोश सब्र, गुरूर और मजबूरी की दास्तान है। pic.twitter.com/PvHe34aSZ0— Journalist Fatima ✍️ (@mahsharfatima86) January 4, 2026
உழைப்பின் மேன்மையையும் விடாமுயற்சியையும் பறைசாற்றும் இந்தச் சம்பவம் ஒருபுறம் ஊக்கமளித்தாலும் முதியோர்களுக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்களின் அவசியம் குறித்த விவாதத்தையும் பொதுமக்களிடையே எழுப்பியுள்ளது.
