அமிர்தசரஸ் வடியான்  அதன் காரசாரமான சுவைக்காக மிகவும் பிரபலமானது. ஆனால், இந்த வடியான் ஒரு தொழிற்சாலையில் எவ்வளவு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல உணவு பிளாக்கர் அமர் சிரோஹி பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், துருப்பிடித்த பழைய இயந்திரங்கள் மூலம் மாவு பிசையப்படுவதையும், தொழிலாளர்கள் அந்த மாவு கலவையின் மீது வெறும் கால்களுடன் நடப்பதையும் காண முடிகிறது.

கைகளில் கையுறைகள் அணியாமல் அழுக்கு கைகளால் வடியான் உருண்டைகள் பிடிக்கப்படுவதைப் பார்த்து இணையவாசிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சுமார் 26 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ, உள்ளூர் உணவுப் பொருட்களின் தரம் குறித்துப் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

வடியான் துண்டுகள் வெயிலில் காயவைக்கப்படும்போது அதன் மீது தூசு மற்றும் அழுக்குகள் படியும் வகையில் திறந்தவெளியில் விடப்படுகின்றன. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “சுவை என்ற பெயரில் விஷத்தை விற்கிறார்கள்” என்றும், “இதை மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளுக்குக் கூட கொடுக்கக்கூடாது” என்றும் கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Amar Sirohi (@foodie_incarnate)

“>

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கடைகளில் வடியான் வாங்குவதற்கு முன்பு மக்கள் நூறு முறை யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.