சமூக வலைதளங்களில் விதவிதமான சமையல் வீடியோக்கள் வைரலாவது வழக்கம், ஆனால் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு நபர் முட்டையை உடைக்க கரண்டிக்குப் பதிலாக ஒரு ‘ரெஞ்ச்’ (Wrench) கருவியைப் பயன்படுத்துகிறார். அதுமட்டுமின்றி, முட்டையை ஒரு தட்டில் ஊற்றாமல், நேரடியாக மைக்ரோவேவ் ஓவனின் (Microwave Oven) உட்புறத் தட்டிலேயே உடைத்து ஊற்றுகிறார்.
View this post on Instagram
அந்த முட்டை ஓவனுக்குள் சுழன்று வெந்து கொண்டிருக்கும் காட்சிகளை கேமரா மிக அருகில் படம் பிடித்துள்ளது. இந்த வீடியோ 1.6 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலான நிலையில், இதைப் பார்த்த நெட்டிசன்கள் “முட்டையை இப்படி அசிங்கமாகவா சமைப்பார்கள்?” என்று முகம் சுளித்துள்ளனர்.
அதே சமயம், பலரது சந்தேகம் எல்லாம் “மைக்ரோவேவ் ஓவனுக்குள் கேமராவை எப்படி வைத்தீர்கள்? அது எப்படி வெடிக்காமல் தப்பியது?” என்பதுதான். இதற்குப் பதிலளித்த சில குறும்புக்கார நெட்டிசன்கள், “உலகமே அழிந்தாலும் கேமரா மேனுக்கு எதுவும் ஆகாது” என்று கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
