சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்பவர் ஒவ்வொருவரின் இதயத்தையும் மென்மையாக்கி வருகிறது. ஒரு ஏழைத் தாய் தனது சிறப்பு குழந்தையை (Special Child) சிகிச்சைக்காக ஒரு மருத்துவரிடம் அழைத்து வந்துள்ளார். சிகிச்சை முடிந்து, அந்தத் தாய் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்து மருத்துவரிடம் நீட்டி, “தயவு செய்து இந்த மருத்துவச் செலவுக்கான பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று மன்றாடிக் கேட்டுள்ளார். ஆனால், அந்த மருத்துவர் மிகவும் கனிவுடன் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
A doctor treated a special child without charging money.
MOTHER : "Please take the money."
Doctor gently refused to take money.
Touched by his compassion, she folded her hands and offered heartfelt blessings ❤️ pic.twitter.com/ZCeJpzMYIL
— News Algebra (@NewsAlgebraIND) January 5, 2026
மருத்துவரின் இந்த எதிர்பாராத கருணையைக் கண்டு நெகிழ்ந்து போன அந்தத் தாய், பணத்தை விட மேலான தனது நன்றியையும் ஆசியையும் வழங்கிய விதம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அவர் தன் கைகளைக் கூப்பி, கண்ணீர் மல்க அந்த மருத்துவருக்கு மனதார ஆசி வழங்கினார். “வைத்தியம் பார்ப்பவர் கடவுளுக்குச் சமம்” என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்த இந்த வீடியோ, மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த மருத்துவரைப் பாராட்டி இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
