மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள சுங்கி சௌக்கி பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை கேலி செய்ததை தட்டிக்கேட்ட டென்ட் கொட்டகை உரிமையாளர் பூனம் ததானி என்பவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் கைக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர வெடிவிபத்தில் பூனம் ததானியின் மகள் ஜாஸ்மின் முகத்தில் பலத்த காயமடைந்து மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
Tent Owner’s House Bombed, Young Girl Injured in Revenge Attack Over Harassment Protest in Jabalpur#MadhyaPradesh #FreePresMP #MPCrime pic.twitter.com/oiXhIfbm79
— Free Press Madhya Pradesh (@FreePressMP) January 5, 2026
ஏற்கனவே கடந்த நவம்பர் மாதத்தில் இதே கும்பல் வீட்டின் மீது கல்வீச்சு நடத்தியும் வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததே இந்த துணிகர தாக்குதலுக்கு காரணம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
