அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த காரில் இருந்து இளம் பெண் ஒருவர் திடீரென வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், கார் மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக காரின் கதவு திறப்பதைக் காண முடிகிறது.

மேலும் நிலைதடுமாறிய அந்தப் பெண் சாலைக்கு நடுவே விழுந்து பலமுறை உருண்டு செல்கிறார். இதைக் கண்ட பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இந்த விபத்து பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

“>

இது தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ, கார் பயணத்தின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது. காரின் கதவுகள் சரியாக மூடப்பட்டிருப்பதை உறுதி செய்வதும், சீட் பெல்ட் அணிவதும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணுக்குப் பின்னால் வந்த வாகனங்கள் சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.