மும்பை புறநகர் ரயிலில் இருக்கையின் மீது காலை வைத்தது தொடர்பாக இரு பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறிய வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசல் மிகுந்த அந்த ரயிலில், சக பயணி ஒருவர் இருக்கையின் மீது காலை வைத்திருந்ததைக் கண்ட மராத்தி பேசும் நபர் ஒருவர், இது காலை வைக்கும் இடமா என்று ஆக்ரோஷமாகச் சத்தமிட்டார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Lit Memes Mumbai (@litmemesmumbai)

மேலும், அந்தப் பயணியை உடனடியாக மன்னிப்பு கேட்கும்படி மிரட்டிய அவர், கோபத்தின் உச்சத்தில் அந்தப் பயணியின் முகத்தில் ஓங்கி அறைந்தார். சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அறை வாங்கிய பயணி எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இருப்பதும், அந்த நபர் தொடர்ந்து அவரை மராத்தி மொழியில் திட்டித் தீர்ப்பதும் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் மும்மையில் மொழி மற்றும் பிராந்திய ரீதியான விவாதங்களைத் தூண்டியுள்ள நிலையில், பொது இடங்களில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், அதே சமயம் சட்டத்தை எவரும் கையில் எடுக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.