மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டபோது, ஒரு பச்சிளம் குழந்தையின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. அந்த இக்கட்டான தருணத்தில், ஒரு வினாடி கூட தாமதிக்காத அங்கிருந்த பெண் மருத்துவர், எந்தவிதத் தயக்கமும் இன்றி தன் வாய் மூலம் அந்தக் குழந்தைக்குச் செயற்கை சுவாசம் (Mouth-to-mouth breathing) அளித்தார். நவீனக் கருவிகள் கைவிட்ட நேரத்தில், தன் உயிர்க்காற்றையே அந்தக் குழந்தைக்கு வழங்கி, அந்தப் பிஞ்சு உயிரை அவர் மீட்டெடுத்த விதம் பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
GOOSEBUMPS: When the oxygen supply failed, this lady doctor didn’t hesitate, she saved a newborn using mouth-to-mouth breathing 😭
True heroes don’t wear capes… they wear white coats. ❤️🩹pic.twitter.com/bIDA8u93qc
— Restoring Your Faith in Humanity (@HumanityChad) January 3, 2026
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. “கடவுளை நேரில் பார்த்ததில்லை, ஆனால் இன்று இந்த மருத்துவப் பெண்மணியின் வடிவில் பார்த்தோம்” எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். கருணைக்கும் கடமை உணர்வுக்கும் எல்லையே இல்லை என்பதை உலகிற்கு உணர்த்திய இந்த “வெள்ளை அங்கி அணிந்த தேவதை”யின் செயல், மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உறுதி செய்துள்ளது.
