கலாச்சார எல்லைகளைக் கடந்து மலர்ந்த ஒரு அழகான திருமணத்தின் காணொளி தற்போது வைரலாகி வருகிறது. இந்திய மணமகன், வெளிநாட்டு மணமகளின் உச்சி வகுட்டில் குங்குமம் வைக்கும் நெகிழ்ச்சியான தருணம் பார்ப்பவர் எவரையும் கவர்கிறது. வட இந்திய பாணியில் அழகிய லெஹங்கா அணிந்திருந்த அந்த மணமகள், குங்குமம் வைக்கப்பட்டவுடன் மகிழ்ச்சியில் கைதட்டிச் சிரிக்கிறார்.

இந்த பொன்னான தருணத்தை பதிவு செய்த காணொளி, கலாச்சாரங்கள் கடந்த காதலின் வலிமையை பறைசாற்றி, இணையத்தில் பலரது மனங்களை வென்று வருகிறது.