சமூக வலைதளங்களில் செல்வாக்கு பெற்ற நபர் ஒருவர் பதிவிட்ட புத்தாண்டு கொண்டாட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது. வழக்கமான கொண்டாட்டங்கள் மற்றும் வாணவேடிக்கைகளுக்கு மத்தியில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அந்த நபர் தனது நண்பர்களுடன் வீட்டிற்குள் மகிழ்ச்சியாகப் புத்தாண்டைக் கொண்டாடும் அதே வேளையில், பக்கத்து கட்டிடத்தின் பால்கனியில் ஒருவர் மட்டும் தனியாக அமர்ந்து அமைதியாகப் புத்தாண்டை வரவேற்பது பதிவாகியுள்ளது.
இதனைப் பார்த்த அந்தப் பதிவர், தனிமை என்பது சில நேரங்களில் அமைதியாகத் தெரிந்தாலும் மனித உறவுகளின் முக்கியத்துவம் எவ்வளவு பெரியது என்பதை உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டு தனது பிறந்தநாளைத் தனியாகக் கொண்டாட நினைத்தபோது ஏற்பட்ட கனமான அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், மனிதர்களின் இருப்பு மற்றும் அன்பானவர்களின் துணை வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
View this post on Instagram
சுமார் 95 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ள இந்த வீடியோ, இன்றைய டிஜிட்டல் உலகில் உண்மையான மனிதத் தொடர்புகளின் மதிப்பை மக்களுக்கு உணர்த்தும் விதமாக அமைந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
