பாலிவுட் சினிமாவுக்கும், அதன் பாடல்களுக்கும் எல்லைகள் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில், சீன நபர் ஒருவர் இந்திப் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடும் காணொளி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்தக் காணொளியில், சீன நபர் ஒருவர் உணவகம் ஒன்றில் அமர்ந்து மிக அமைதியாகச் சூப் குடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது பின்னணியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகிப் புகழ்பெற்ற ‘மொஹபதீன்’ படப் பாடல் ஒலிக்கத் தொடங்குகிறது.
உடன் இருந்த நண்பர்கள் அவரை நடனமாடுமாறு வற்புறுத்த, அதுவரை அமைதியாக இருந்த அந்த நபர், திடீரென எழுந்து பாலிவுட் பாணிக்கே உரிய துள்ளலுடன் நடனமாடத் தொடங்குகிறார்.
View this post on Instagram
பாடலின் தாளத்திற்கு (Beat) ஏற்ப அவர் ஆடும் நடனம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. நடனம் மட்டுமல்லாது, இந்தி வரிகளுக்கு அவர் கொடுக்கும் ‘லிப்-சின்க்’ (Lip-sync) கூடுதல் ஈர்ப்பாக உள்ளது. இதைப் பார்த்த அவரது நண்பர்கள் ஆரவாரம் செய்து கைதட்டி அவரை உற்சாகப்படுத்துகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்துள்ளனர். குறிப்பாக இந்திய இணையவாசிகள் அந்த சீன நபரின் திறமையைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.
இந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் இந்திய பயனர்கள் நகைச்சுவையாகவும், நெகிழ்ச்சியாகவும் பல கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஆதார் அட்டை: “இவரது அசைவுகள் அப்படியே இந்தியர்களைப் போலவே இருக்கிறது, இவருக்கு உடனடியாக ஒரு ஆதார் அட்டை கொடுங்கள்,” என ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு பயனர் ஷாருக்கான் இதனை நிச்சயம் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
