சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் மும்பையைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி ஸ்ரேயா குமாரி சிங்கின் கிரிக்கெட் திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது அத்தையுடன் மும்பையில் வசித்து வருகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Shreya Singh (@shreyaksingh.28)

மிகச் சிறிய வயதிலேயே பந்துகளை எதிர்கொள்ளும் விதம், பேட்டிங் செய்யும் நேர்த்தி மற்றும் பந்துவீச்சுத் திறன் ஆகியவற்றால் இவரைப் பலரும் இளைய விராட் கோலி என்று பாராட்டி வருகின்றனர். வறுமையான குடும்பச் சூழலில் பிறந்த இச்சிறுமியின் எதிர்கால நலன் கருதி, இவரது அத்தை மற்றும் உறவினர்கள் இவரைப் பராமரித்து கிரிக்கெட் பயிற்சியில் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

இச்சிறுமியின் அபாரமான திறமையைக் கண்டு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவிப்பதோடு, உரியப் பயிற்சி கிடைத்தால் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நட்சத்திரமாக இவர் ஜொலிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.