மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக இளைஞரணி தலைவர் விஜய பிரபாகரன், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் தேர்தலில் திமுக அல்லது தவெக ஆகிய கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, தற்போதைக்கு சஸ்பென்ஸ் வைப்பதாக அவர் பதில் அளித்துள்ளார்.
கூட்டணி குறித்த இறுதி முடிவை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் விரைவில் அறிவிப்பார் என்று அவர் கூறினார்.
குறிப்பாக, வரும் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும் என்றும், அதுவரை தொண்டர்களும் பொதுமக்களும் காத்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
