அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் புகழ்பெற்ற பாடலுக்கு நடனமாடிய காணொளி தற்போது இணையதளத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அங்கித் திவேதி எனும் அந்த ஊழியர், தனது அலுவலகத்தில் கணினிகளுக்கு இடையே சக ஊழியர்கள் முன்னிலையில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் நடனமாடியுள்ளார்.
View this post on Instagram
கார்ப்பரேட் வேலைக்காகத் தனது கலை ஆர்வத்தை விட்டுக்கொடுத்த ஒருவரின் வெளிப்பாடு எனும் குறிப்புடன் பகிரப்பட்ட இந்தக் காணொளி, இதுவரை ஒரு கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அங்கித்தின் அபாரமான நடனத் திறமையைப் பாராட்டியுள்ள நெட்டிசன்கள், அவரை ஹிருத்திக் ரோஷனுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.
இந்தத் தகவல் ஹிருத்திக் ரோஷனின் கவனத்திற்கும் சென்ற நிலையில், அந்த ஊழியரின் நடனத்தைப் பாராட்டிய நடிகர், இது போன்ற நடன அசைவுகளைத் தனக்கும் கற்றுக் கொடுக்குமாறு கமெண்ட் செய்திருப்பது இணையத்தில் பெரும் விவாதத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
