உத்தரப் பிரதேசத்தில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், சிறுமி ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் மற்றும் பைக் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்து வந்த அந்த நபர், கடையிலிருந்த சிறுமியை திடீரெனப் பிடித்துக் கொண்டு, ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் தராவிட்டால் சிறுமியின் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று கூச்சலிட்டுள்ளார்.
இந்த பதற்றமான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், அந்த நபரை லாவகமாகப் பேசி திசைதிருப்ப முயன்றனர். ஒருகட்டத்தில் சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்க, போலீசார் அந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவரைப் பிடித்தனர்.
First day, first show of law and order in Uttar Pradesh.
In Bijnor district of Uttar Pradesh, a man held at knife-point a minor girl inside a shop and allegedly made random demand. She was later rescued by the police and the accsued, identified as Ajeet Bal Govind, was… pic.twitter.com/yIrQys8UUt
— Piyush Rai (@Benarasiyaa) January 1, 2026
“>
இதில் காயமடைந்த குற்றவாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட சிறுமி காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த துணிச்சலான மீட்புப் பணிக்காகப் போலீசாரைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
