2025-ம் ஆண்டு நமக்கு பல சோதனைகளும், நம்பிக்கைக்குரியவர்களிடமிருந்து ஏமாற்றங்களும் நிறைந்த ஆண்டாக அமைந்தது. ஆனால், “நடந்தவை யாவும் நன்மைக்கே” என்ற உயரிய நோக்கத்துடன், அந்தத் துரோகங்களை முறியடித்து நாம் இன்று இன்னும் வலிமையான சக்தியாக உருவெடுத்துள்ளோம்.
தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கையில், வஞ்சகங்கள் மறைந்து நீதியின் ஒளி விரைவில் பிறக்கும். வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 26 தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும் என்ற தீர்க்கமான நம்பிக்கையை எனது தாயார் என்னிடம் பகிர்ந்துள்ளார்.
இந்த இயக்கம் பதவிக்காக உருவானது அல்ல, தொண்டர்களின் ரத்தத்தாலும் வியர்வையாலும் கட்டப்பட்டது. உங்கள் அன்பும் விசுவாசமுமே எங்களின் பலம். மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலில், இந்த புத்தாண்டை பாமக-வின் பொற்காலமாக மாற்ற நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.
இந்த புத்தாண்டு தமிழகத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும் எனக்கூறி, மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
