தமிழகத்தில் தேர்தல் நேரங்கும் நேரத்தில் பிற கட்சிகளில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைவது என்பது சமீப காலமாக அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜேஷ் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அவருடன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தினேஷ், மாவட்ட பிரதிநிதிகள் வின்சென்ட் மற்றும் ஹரிஷ் குமார் ஆகியோரும் இணைந்தனர். மேலும் மநீம திருவள்ளூர் மத்திய மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிருஷ்டி தாஸ் உள்ளிட்ட பிற கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இணைத்துக் கொண்டனர்.
