உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள எத்மத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது கணவருடன் இருந்த பெண்ணை ஒரு பெண் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சாலையில் கணவருடன் அப்பெண் நெருக்கமாக இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த மனைவி, அந்தப் பெண்ணை சரமாரியாகத் தாக்கிய நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர்.

இந்த மோதலின் போது கணவர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதேவேளையில், தனது கணவர் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதோடு தன்னை துன்புறுத்தி வருவதாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.