பீகார் மாநிலத்தில் அரிய வகை முதலை ஒன்றை மோட்டார் சைக்கிளில் கட்டி தரதரவென இழுத்துச் சென்ற கொடூரமான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவைத் தேடி ஊருக்குள் வந்த அந்த முதலையை, அங்குள்ள இளைஞர்கள் சிலர் கயிற்றால் கட்டி பைக்கில் இணைத்து இழுத்துச் சென்றனர்.

இந்தச் செயலால் அந்த விலங்கு மிகுந்த சித்ரவதைக்கு உள்ளானது. இதைக் கண்ட விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அடுக்கடுக்கான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பீட்டா அமைப்பு அளித்த புகாரின் பேரில், பெட்டியா வனத்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் முதலைகள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மிக உயரிய பாதுகாப்பு வழங்கப்பட்ட உயிரினமாகும்.

 

View this post on Instagram

 

A post shared by OfficialPETAIndia (@petaindia)

“>

எனவே, இந்த குற்றத்திற்காக பிணையில் வர முடியாத சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. வனவிலங்குகள் ஊருக்குள் வரும்போது அவற்றைத் துன்புறுத்தாமல், அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பதே முறை என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.