கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கஞ்சிரப்பள்ளி பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோரம் இருந்த மருந்து கடைக்குள் (Pharmacy) புகுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தின் போது மருந்து கடையில் முதியவர் ஒருவர் மருந்து வாங்கிக் கொண்டிருந்த நிலையில், மின்னல் வேகத்தில் வந்த கார் கடையின் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது. இதில் அந்த முதியவர் மீதும் கார் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.

“>

 

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பிய நிலையில், இந்த விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.