ஆண்களின் இரட்டை வாழ்க்கை மற்றும் ரகசியத் திருமணங்கள் வெளிச்சத்திற்கு வரும்போது, குடும்பங்களுக்குள் மட்டுமல்லாமல் பொதுவெளியிலும் பெரும் கலாட்டாக்கள் அரங்கேறுவது வழக்கம்.
அந்த வகையில், முதல் மனைவிக்குத் தெரியாமல் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஜாலியாக வலம் வந்த நபர் ஒருவரை, அவரது இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் நடுரோட்டில் நேருக்கு நேர் சந்தித்துச் சட்டையைப் பிடித்து உலுக்கிய ஹை வோல்டேஜ் டிராமா வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தன் கணவன் தனக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்து, அவரையே இரண்டாவது திருமணமும் செய்து கொண்ட அதிர்ச்சித் தகவலை அறிந்த முதல் மனைவி, கணவனைப் பின்தொடர்ந்து சென்று கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
அப்போது அங்கு இரண்டாவது மனைவியும் உடன் இருக்கவே, இரண்டு பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிப் பின்னர் அது கணவன் மீதான கோபமாக மாறியது. “எனக்குத் தெரியாம இவளை எப்படிடா கல்யாணம் பண்ணுன?” என்று முதல் மனைவி கேட்க, “இவன் என்னோட புருஷன், நீ யாருடி நடுவுல வர?” என்று இரண்டாவது மனைவி சண்டையிட, அந்த இடமே ஒரு சினிமா படப்பிடிப்புத் தளம் போலக் காட்சி அளித்தது.
ஒரு கட்டத்தில், தங்களை ஏமாற்றிய கணவன் மீது இரண்டு மனைவிகளுக்கும் ஒரே நேரத்தில் கோபம் திரும்பவே, இருவருமாகச் சேர்ந்து அந்த நபரை நடுரோட்டில் வைத்துச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். அங்கு திரண்ட பொதுமக்கள் இந்த கூத்தை வேடிக்கை பார்த்ததுடன், சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விட்டனர்.
ரகசியமாக இரண்டு வாழ்க்கை வாழ நினைத்த நபரின் சாயம் இப்படி நடுரோட்டில் வெளுத்துப் போனதும், அவர் தப்பியோட வழியின்றி முழி பிதுங்கி நின்றதும் இணையத்தில் வைரலாகி, நக்கல் கமெண்ட்களுடன் நெட்டிசன்களால் பரப்பப்பட்டு வருகிறது.
